காங்கோ தமிழ்ச் சங்கம் (Congo Tamil Association), முன்னர் காங்கோ தமிழ் இளைஞர் பண்பாட்டு மன்றம் (TYCA Congo) என்றழைக்கப்பட்டது) என்பது காங்கோ வாழ் தமிழர்களால் நடத்தப்படும் ஒரு தமிழ்ச்சங்கம் ஆகும். இது காங்கோ மக்களாட்சிக் குடியரசு தலைநகர் கின்சாசா பெருநகரில் வசிக்கும் காங்கோ தமிழர்கள் ஒன்று சேர்ந்து நடத்தும் தமிழ்ச்சங்கமாகும். 2011 ஆகத்து இந்திய விடுதலை நாள் கொண்டாட்டத்தோடு ஆரம்பிக்கப்பட்ட இந்த சங்கமானது எண்ணற்ற விழாக்கள், கொண்ட்டாட்டங்கள், இலக்கிய விழாக்கள், தமிழ் முப்பெரும் விழாக்கள், புத்தக வெளியீட்டு விழாக்கள் போன்றவற்றை நடத்தி வருகிறது. காங்கோ – கின்சாசா வாழ் தமிழ் மக்களை ஒருங்கிணைக்கும் பாலமாக இந்தசங்கம் செயற்படுகிறது. அதோடு தமிழ் மொழி, பண்பாடு இவற்றை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் விதமாக கின்சாசா வாழ் தமிழர்களின் குழந்தைகளுக்கென்று ஞாயிறு தோறும் காங்கோ தமிழ்ப்பள்ளி செயற்பட்டு வருகிறது. இங்குள்ள தமிழர்களின் எழுத்தாற்றல் மற்றும் வாசிக்கும் ஆர்வத்தை தூண்டும் விதமாக காங்கோ தமிழ்ச்சாரல் என்ற மாத இதழ் மின்னிதழ் வடிவிலும் அச்சு வடிவிலும் வெளியிடப்பட்டது. தற்போது இவ்விதழ் ஒரிசா பாலு அவர்களின் ஆலோசனையின் படி ஆப்பிரிக்கத் தமிழ்ச்சாரல் என்ற மாத இதழாக ஆப்பிரிக்காவில் வாழும் தமிழ் எழுத்தாளர்களுடய பங்களிப்புகளுடன் மின்னிதழாக மட்டும் வெளிவருகிறது.
Upcoming CTA Events
Join us in celebrating Tamil culture, traditions and community togetherness.

Diwali Celebration 🎉
Date : November

New Year Celebration 🎉
Date : Jan 1st
Office Bearers 2026 – 2027

President
Mr. Prassanna

Vice President
Mrs. Lalitha Yuvaraj

Vice President
Mr. Ilamkumaran

Secretary
Mr. Palaniappan

Treasurer
Mr. Babu

Joint Treasurer
Mr. Subash

Cultural Secretary
Mr. Ramu
